மத்திகிரியில் ரூ.6 கோடியில் கோழிக் குஞ்சுகள் உற்பத்தி மையம்

ஒசூர் வட்டம், மத்திகிரி கால்நடை பண்ணையில் குஞ்சு பொறிப்பகம் அமைக்க கொட்டகைகளுக்கான கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர்வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஒசூர் வட்டம், மத்திகிரி கால்நடை பண்ணையில் குஞ்சு பொறிப்பகம் அமைக்க கொட்டகைகளுக்கான கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர்
வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: மத்திகிரி கால்நடை பண்ணையில் ஒரு மாதத்துக்கு 1 லட்சம் கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் கூடம் ரூ.6 கோடியே 75 லட்சத்தில் 6 கொட்டகைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இங்கு கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்து, தமிழக அரசின் கிராமப் புற பயனாளிகள் பயன்பெறும் வகையில் புறக்கடை கோழி வளர்க்கும் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் வழங்கப்படவுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குஞ்சுகள் பொறிக்கத் தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்து, விரைவில் மாதத்துக்கு 1 லட்சம் குஞ்சுகள் வீதம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தரமான கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் அரசுக்கு வருவாயும், அரசின் சிறப்பு திட்டமான புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டப் பயனாளிகளுக்கு தலா 50 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். தரமான குஞ்சுகள் வழங்குவதன் மூலம் பயனாளிகளுக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சு.பிரபாகர் தெரிவித்தார். ஆய்வின் போது, கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் மனோகரன், பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் வி.சி.பிரபாகரன், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், கோழி விரிவாக்க நிலைய உதவி மருத்துவர் ஸ்ரீலதா, வட்டாட்சியர் செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com