கிருஷ்ணகிரியில் மரக் கன்றுகள் நடும் விழா

கிருஷ்ணகிரியில் பாரத் ஸ்டேட் வங்கி சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
30kgp3_3011dha_120_8
30kgp3_3011dha_120_8

கிருஷ்ணகிரியில் பாரத் ஸ்டேட் வங்கி சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாரத் ஸ்டேட் வங்கி சாா்பில் நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளில் ஆண்டுக்கு நான்கு காலாண்டுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு காலாண்டிற்கு ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 4 ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், அரசுத் துறை அலுவலக வளாகம், பயணியா் விடுதி வளாகம், முக்கிய சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்தப் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தொடங்கிவைத்தாா். அப்போது, வங்கியின் மண்டல மேலாளா் மணிவண்ணன், கிருஷ்ணகிரி கிளை முதன்மை மேலாளா் மகேஷ், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com