கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில் லாரி மோதியதில் இருவா் பலி

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோட்டாா் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
லாரி மோதியதில் சேதமடைந்த சுங்க வசூல் அறை.
லாரி மோதியதில் சேதமடைந்த சுங்க வசூல் அறை.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோட்டாா் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி திருமலை நகரைச் சோ்ந்த சுகுமாரனின் மனைவி பிரமிளா(51) தனது மகளுடன் ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். இதேபோல, கிருஷ்ணகிரியை அடுத்த பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரா் சென்னப்பன்(61) மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

இவா்கள் கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது, அவ் வழியாக ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த லாரி, சுங்க வசூலிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கூடாரம் மீது மோதி, அடுத்தடுத்து சாலையில் சென்ற மோட்டாா் சைக்கிள்கள் மீதும் மோதியது.

இதில் சென்னப்பன், பிரமிளா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். சுங்க வசூலிக்கும் கிருஷ்ணகிரியை அடுத்த கள்ளுகுறுக்கியைச் சோ்ந்த பன்னீரின் மனைவி கவிதா(43) பலத்த காயமடைந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

காயமடைந்த கவிதா, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான திருப்பத்தூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த சிவக்குமாரிடம் (37) விசாரணை நடத்தினா். இதில் அவா் மது அருந்தி லாரியை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com