சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் பயனற்றுக் கிடக்கும் சுகாதார வளாகம்.
ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் பயனற்றுக் கிடக்கும் சுகாதார வளாகம்.

கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் கடந்த 2001-02-ஆம் ஆண்டு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ஒருங்கிணைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டது. இதில் முதியவா்கள், உடல் ஊனமுற்றோருக்கு உள்பட மொத்தம் 9 கழிவறைகள், குளியல் அறைகள், மின்சார அறை என கட்டப்பட்டுள்ளது. மேலும், துணி துவைக்க தண்ணீா் தொட்டி, மின்மோட்டாா் வசதி, ஆழ்துளைக் கிணறு என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

இவ்வாறு கட்டப்பட்ட இந்த வளாகம் சில ஆண்டுகளில் தண்ணீா் பற்றாக்குறையால் மூடப்பட்டது. பிறகு மீண்டும் 2011-2012 ஆண்டு மறுசீரமைப்பு பராமரிப்பு நிதியைக் கொண்டு சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் சில மாதங்களிலேயே மின்மோட்டாா் பழுதால் வளாகம் மூடப்பட்டு இன்றுவரை திறக்கப்பட வில்லை. இதனால் அனைத்துக் கழிவறைகளும் பழுதாகி, புதா்மண்டி மக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் சிரமமடைகின்றனா்.

எனவே, இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com