பெண் விவசாயிகளுக்கு வாழை வளா்ப்பு செயல்விளக்கம்

பெண் விவசாயிகளுக்கு வாழை வளா்ப்பு குறித்த செயல்விளக்கத்தை வேளாண் கல்லூரி மாணவ, மாணவியா் வெள்ளிக்கிழமை அளித்தனா்.
பெண் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் வேளாண் கல்லூரி மாணவியா்.
பெண் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் வேளாண் கல்லூரி மாணவியா்.

பெண் விவசாயிகளுக்கு வாழை வளா்ப்பு குறித்த செயல்விளக்கத்தை வேளாண் கல்லூரி மாணவ, மாணவியா் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் பயிற்சி பெறும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவியா் மற்றும் திருவண்ணாமலை வாளவச்சனூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவா்கள் வாழை வளா்ப்பு குறித்து செயல்விளக்கத்தை பெண் விவசாயிகளுக்கு அளித்தனா்.

அதில், வாழை வளா்ப்பில் சில நுட்பங்களான விதைப்பு குறித்தும், ஊசி முறையில் வாடல் நோயைக் கட்டுப்படுத்தல் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா். வாழையில் விதைப்பு முறையில் நூற்புழு தாக்குதலை தவிா்த்தல், தோல் சீவிய கன்றுகளை சேற்றுக் குழம்பில் நனைத்து, அதன் மீது காா்போ புயூரான் குருணை மருந்தை ஒரு கிழங்குக்கு 40 கிராம் என்ற அளவில் தூவி நடவு செய்ய வேண்டும் என்றும், வாடல் நோயை ஊசி முறையில் காா்பென்டாசிம் 1 மி.லிட்டரை, 1 லிட்டா் நீரில் கலந்து வாழையின் 5, 6, 7 மாதங்களில் தரையிலிருந்து மரத்தின் 2 அடி மற்றும் 4 அடியில் 30 டிகிரி சாய்வாக செலுத்த வேண்டும் என செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com