மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தார்,  முகாமில் உதவி ஆசிரியர்கள் மு.இலட்சுமி, த. லதா, ந. திலகா மாணவர்கள் கலந்துகொண்டனர்,  2019 - 20- ம் கல்வியாண்டில் பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி எல்லைக்குட்பட்ட கிராமங்களான ஜோதிநகர், நாச்சகவுண்டனூர், காமராஜ்நகர்,  கெங்கிநாயகன்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களான படதாசம்பட்டி, மண்ணாண்டியூர் ஆகிய கிராமங்களுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம்,  எமது பள்ளியில் வழங்கப்படும் கணினிக் கல்வி, இணையவழிக் ஆங்கிலக் கல்வி, விளையாட்டு மற்றும் செயல்வழிக் கல்வி, செயல்திட்ட வழிக் கல்வி குறித்தும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.  
முதல் வகுப்பில் 10 மாணவர்களும், 6 ம் வகுப்பில் 2 மாணவர்களும், பிற வகுப்புகளில் 11 மாணவர்களும் பள்ளியில் புதியதாகச் சேர்க்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com