பருவத் தேர்வு: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக ஏப்ரல் - 2019 பருவத் தேர்வில் 96.48 சதவீதத் தேர்ச்சியையும், 261 பாடங்களில் 100க்கு 100  மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பி.பி.ஏ. (சி.ஏ)  99.24,  பி.பி.ஏ. 99.03,  பி.காம் (சி.ஏ) 98.70,  பி.சி.ஏ. 98.5,   இளம்அறிவியல் இயற்பியல் துறை 98.40,  கணிதத்துறை 98.16,  தமிழ் இலக்கியம் 98.09,  இளம்அறிவியல் கணினி அறிவியல் துறை 98.07,  தாவரவியல் துறை 97.67,  பி.காம் 96, இளம் அறிவியல் விலங்கியல் துறை 92.96,  வேதியியல் துறை 92.5,   இளங்கலை ஆங்கிலம் 87.01 சதவீதத் தேர்ச்சியை பெற்று  கல்லூரிக்குப் பெருமை
சேர்த்துள்ளனர். 
இளங்கலை கணிதத் துறை மாணவி சு. நர்மதா மூன்று பாடங்களில் 100க்கு 100  மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.  ஆனந்த பிரியா, ராஜேஸ்வரி,   நிவேதா,   பூவிழி,   நித்யா,  வைசியா,  ஹரிஷ்வரன்,  பிரீத்தி,  பிரியதர்ஷினி, பிரியங்கா,  ரமேஷ்,  பிரியங்கா,  ராஜேஸ்வரி,  ஹரினிபிரியா,  வித்யா,  அபிராமி, உமாபதி ஆகிய பதினேழு மாணவ - மாணவியர் இரண்டு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 121 மாணவர்கள் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.சார்பு பாடமாகக் கணிதத்தை பயின்றவர்களில் 31,  இளங்கலை வேதியியல் முதன்மைப் பாடத்தில் 36,  முதுகலை கணிதம் முதன்மை பாடத்தில் 24,  பிகாம் (சிஏ) முதன்மை பாடத்தில் 12 மாணவர்களும் 100க்கு 100  மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி நிறுவனர் வே. சந்திரசேகரன்,  செயலர்  ஆர்.பி. ராஜி,  முதல்வர் க. அருள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com