மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற பெண்கள்: போலீஸார் விசாரணை

தளி அருகே  மூதாட்டியிடம் நூதன முறையில் 3  பவுன் நகையை பறித்துச் சென்ற மூன்று பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

தளி அருகே  மூதாட்டியிடம் நூதன முறையில் 3  பவுன் நகையை பறித்துச் சென்ற மூன்று பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
தளி  அருகே உள்ள சென்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பண்ணா மனைவி  மனைவி புஷ்பம்மாள் (65). இவர் ஜவளகிரியில்  உள்ள சென்னமாதா கோயிலுக்கு சென்றுள்ளார்.  அப்போது 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பெண்கள் அவரின் அருகில் வந்துள்ளனர். அவர்கள் இந்தப் பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. எனவே தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிய வேண்டாம். எங்களிடம் கழுற்றிக் கொடுங்கல் அதை நாங்கள் காகிதத்தில் மடித்துத் தருகிறோம். வீட்டில் போய் அதை பிரித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதை நம்பிய புஷ்பம்மாள் தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை அந்த பெண்களிடம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புஷ்பம்மாள்,  தளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் உதவி ஆய்வாளர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com