வாகனச் சோதனையில் ரூ.4.69 லட்சம் பறிமுதல்

கெலமங்கலம், உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில்  நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி

கெலமங்கலம், உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில்  நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.69 லட்சத்தை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். 
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் உத்தனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி  சோதனை செய்தனர்.  அதில்  ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் காரில் சென்றவர் கிருஷ்ணகிரி காந்தி நகரைச் சேர்ந்த செல்வராஜ் என தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
அதே போல கெலமங்கலத்தில் இருந்து ஒசூர் செல்லும் சாலையில் பைரமங்கலம் உள்ளது. இங்கு தளி வட்டார வளர்ச்சி அலுவலரும், பறக்கும் படை அலுவலருமான சீனிவாச சேகர், கெலமங்கலம் சிறப்பு உதவி ஆய்வாளர் வீரகுமார் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தை போடிச்சிப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. 
இதையடுத்து அந்த பணம் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் தங்கபாண்டி, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாலக்கோட்டில் ரூ.1.95 லட்சம் பறிமுதல்..
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கோட்டில் தேர்தல் நடத்தும் உதவித் தேர்தல்  அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஒசூரிலிருந்து அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் காரில் வந்த தருமபுரி மாவட்டம், பொம்பட்டியைச் சேர்ந்த பிரபு மற்றும் விஜய் ஆகியோர் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com