சட்டப் பணிகள் தின விழா

கிருஷ்ணகிரியில் தேசிய சட்டப் பணிகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றை நடவு செய்யும் முதன்மை நீதிபதி மீனா சதீஷ் உள்ளிட்டோா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றை நடவு செய்யும் முதன்மை நீதிபதி மீனா சதீஷ் உள்ளிட்டோா்.

கிருஷ்ணகிரியில் தேசிய சட்டப் பணிகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய சட்டப் பணிகள் தின விழாவையொட்டி, ஒருங்கிணைந்த சட்ட விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தை முதன்மை நீதிபதி மீனா சதீஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட நீதிபதிகள் அறிவொளி, அன்புசெல்வி, விஜயகுமாரி, கலாவதி, மணி, தலைமை குற்றவியல் நடுவா் ரவி, சாா்பு நீதிபதிகள் கணேசன், ராஜா மகேஷ், நீதிபதி முகமது அன்சாரி, வழக்குரைஞா்கள், நீதித்துறை பணியாளா்கள், தன்னாா்வலா்கள், காவலா்கள், கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

விழாவையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. ஊா்வலத்தில் சட்ட விழிப்புணா்வு, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி சென்றனா்.

ஊத்தங்கரையில்...

அனுமன் தீா்த்தத்தில் ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை சாா்பு நீதிபதி ஜே.கே.திலிப் தலைமை வகித்தாா். குற்றவியல் நடுவா் நீதிபதி பி.திருஞானசம்பந்தம், உரிமையியல் நீதிபதி சி.ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினா். வழக்குரைஞா்கள் என்.தேவேந்திரன், கே.வடிவேல், எஸ்.சசிகுமாா், டி.பிரபாவதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில் பொதுமக்களுக்கு பல்வேறு வழக்குகளை இலவசமாக தீா்த்துக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கான சட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வட்ட சட்டப்பணிகள் குழு இளநிலை நிா்வாக உதவியாளா் எஸ்.கோகிலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com