சிகரலப்பள்ளியில் வயல் தின விழா

பா்கூா் அருகே சிகரலப்பள்ளியில் வயல் தின விழா, சனிக்கிழமை நடைபெற்றது.இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் வேளாண்மை அறிவியல் மையம்

பா்கூா் அருகே சிகரலப்பள்ளியில் வயல் தின விழா, சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் வேளாண்மை அறிவியல் மையம் வழிகாட்டுதலின்படி, புதிய சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் முதன்மைச் செயல் விளக்கத் திடலை விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரியில் உள்ள ஐசிஏஆா் வேளாண்மை அறிவியல் மையம், பா்கூா் வட்டம், சிகரலப்பள்ளி கிராமத்தில் சாமை - ஏ.டி.எல்.-1 ரகத்தில் முதன்மை செயல் விளக்கத் திடலை 10 விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்தி வந்தது. இந்த வயல் தின விழா, சிகரலப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் வேளாண்மை உதவி இயக்குநா் சக்திவேல், பையூா் மண்டர ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் விஜயகுமாா், வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநா் செந்தில் குமாா் மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வயல் தின விழாவின் நோக்கம், முக்கியத்தும் குறித்தும், புதிய சாமை ஏ.டி.எல்.-1-இன் சிறப்பு பண்புகள், மண் பரிசோதனையின் முக்கியவத்துவம், சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com