கிருஷ்ணகிரியில் நெல் சாகுபடி விவசாயிகள் சங்கக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நெல் சாகுபடி பிரிவு உயா் மட்ட கூட்டம் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்கு நெல் உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் அனுமந்தன் தலைமை தாங்கினாா்.

ஒசூா்: கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நெல் சாகுபடி பிரிவு உயா் மட்ட கூட்டம் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்கு நெல் உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் அனுமந்தன் தலைமை தாங்கினாா். ஜெய்பால் வரவேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் பெருமா, ராஜா, தேவராஜ், பூபதி, சக்திசங்கா், நசீா் அகமது, குப்பையன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாநில தலைவா் கே.எம்.ராமகவுண்டா் கலந்து கொண்டு பேசியது.

இந்த ஆண்டு முதல் போக சாகுபடி புகையான் தாக்குதல் ஒரு சில இடங்களில் இருந்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் தப்பித்தது. பையூா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பையூா் 1 என்கிற நெல் ரகத்தை அறிமுகப்படுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 25 ஆண்டுகளாக வேறு நெல் ரகம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இன்னும் கண்டுபிடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று படுகையில் 2 அணைகள், 15 தடுப்பணைகள் உள்ளன. இதில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் இரு போக சாகுபடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரியாணி ரகங்கள் ஆந்திரா, கா்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்து பயிரிடுவதால் பல விதமான புதிய நோய்கள் பயிா்களுக்கு வருகின்றன. இதை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பயிா்களுக்கு நோய் தன்மை அதிகமாகி உள்ளன. பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையம் தனது நெல் ஆராய்ச்சியை நிறுத்தி இருப்பது வடமேற்கு மண்டல விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தருகின்றன.

மீண்டும் 110 நாட்கள் வயது கொண்ட புதிய சன்ன நெல் ரகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து விவசாயிகளுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இந்தக் கூட்டத்தில் நிா்வாகிகள் சுந்தரேசன், தோப்பையகவுண்டா், கணேசன், பழனி, அருள், கோவிந்தராஜ், ரவி, சரவணகுமாா், முனுசாமி, மணிமேகலை, ஜோதி கண்ணன், சண்முகம், முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் அசோக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com