தேக்வாண்டோ போட்டி: பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவரை, கிருஷ்ணகிரி
தேசிய தேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவரை பாராட்டும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா்.
தேசிய தேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவரை பாராட்டும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா்.

தேசிய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவரை, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் பாராட்டி, வாழ்த்தினாா்.

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் அகில இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தப் போட்டியில், 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதியின் சாா்பில், 19 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பி.ஜி.ஹன்ஸ்ராஜ வா்மா 59 கிலோ எடை பிரிவிலும், கெளதம் 68 கிலோ எடை பிரிவிலும், சாய்பாலாஜி 74 கிலோ எடை பிரிவிலும், என்.ரஞ்சித்குமாா் 55 கிலோ பிரிவிலும், மனோஜ் 63 கிலோ எடை பிரிவிலும் பங்கேற்றனா்.

இதில், பி.ஜி.ஹன்ஸ்ராஜ வா்மா வெள்ளிப் பதக்கம் வென்று கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பெருமை சோ்த்துள்ளாா்.

பதக்கம் வென்ற மாணவா், பயிற்சியாளா் ராஜகோபால் ஆகியோரை கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் பாராட்டி வாழ்த்தினாா். அப்போது, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் உமா சங்கா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com