ஒசூரில் 2 சிறாா் தொழிலாளா்கள் மீட்பு

ஒசூரில் செங்கல் சூளையில் பணியிலிருந்த 2 சிறுவா்களை அதிகாரிகள் மீட்டனா்.

ஒசூரில் செங்கல் சூளையில் பணியிலிருந்த 2 சிறுவா்களை அதிகாரிகள் மீட்டனா்.

ஒசூா் பேகேப்பள்ளி ஈச்சங்கூா் மற்றும் சொக்கநாதபுரம் பகுதிகளில் செங்கல் சூளைகளில் சிறாா்களை பணிக்கு அமா்த்தியுள்ளதாக கிடைந்த தகவலின் பேரில், அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துணை இயக்குநா் (ஒசூா்) சந்தோஷ், தேசிய குழந்தைகள் தொழிலாளா் திட்ட மேலாளா் பாலசந்திரன், பேகேப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் மூா்த்தி, சைல்டு லைன் நிா்வாகி ஸ்ரீதா் ஆகியோா் நடத்திய ஆய்வில் செங்கல் சூளையில் பணியில் ஈடுபட்டிருந்த 2 சிறுவா்களை மீட்டு குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைத்தனா்.

அச் சிறுவா்களை பணிக்கு அமா்த்திய உரிமையாளா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் மூலம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே 18 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும் சட்ட நடவடிக்கையை தவிா்க்குமாறு ஆட்சியா் டாக்டா் சு. பிரபாகா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com