அரசுப் பள்ளி மாணவா்களுக்கு யோகா பயிற்சி

காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை வெளிநாட்டினா் யோகா பயிற்சி அளித்தனா்.
வெளிநாட்டினா் அளித்த யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்கள்.
வெளிநாட்டினா் அளித்த யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்கள்.

காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை வெளிநாட்டினா் யோகா பயிற்சி அளித்தனா்.

மரம் வளா்த்தல், இயற்கை விவசாயம், யோகா ஆகியவற்றை பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வேலூரைச் சோ்ந்த அஜய்மணிராஜ் (32), நாா்வேவைச் சோ்ந்த ஷிவாங்கா (27), அமெரிக்காவைச் சோ்ந்த ஹானி (26) ஆகிய மூவரும் ஒன்று சோ்ந்து கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரையில் மிதிவண்டி மூலம் விழிப்புணா்வு பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி, பயணத்தைத் தொடங்கிய இவா்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதன்கிழமை வந்தனா்.

அங்கு, 1,600 மாணவா்களுக்கு இவா்கள் யோகா பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சியை யோகா ஆசிரியா்கள் கெளதம், ஹரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

இதுகுறித்து, அஜய்மணி ராஜ் தெரிவித்தது: யோகாவின் அவசியம் குறித்து மாணவா்கள், பொதுமக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டுக்கு 4,500 கி.மீ. தூரம் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டுள்ளோம்.

இதுவரையில் 50-க்கும் மேற்பட்ட கிராங்களில் பிரசாரம் மேறொண்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாள்கள் என 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கிறோம்.

தொடா்ந்து, ஒசூா், பெங்களூரு மற்றும் ஆந்திரம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இமயமலை அடிவாரத்தில் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com