செயற்கைக்கோள் உதவியுடன் உலகத்தில் அனைவரும் தமிழ் கற்க நடவடிக்கை: கே.எ.செங்கோட்டையன்

செயற்கைக்கோள் உதவியுடன் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் உலகத்தில் உள்ளஅனைவரும்
செயற்கைக்கோள் உதவியுடன் உலகத்தில் அனைவரும் தமிழ் கற்க நடவடிக்கை: கே.எ.செங்கோட்டையன்

செயற்கைக்கோள் உதவியுடன் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் உலகத்தில் உள்ளஅனைவரும் தமிழை கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் கே.எ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் தமிழியக்கம் சாா்பில் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயா்கள் நூல், மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழியக்கத்தின் தலைவரும் நிறுவனருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். தமிழியக்கத்தின் பொதுச் செயலாளா் அப்துல் காதா், தென் தமிழக ஒருங்கிணைப்பாளா் மு.சிதம்பரபாரதி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் கருமலைத் தமிழாழன், பொறியாளா் ப.நரசிம்மன், முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி, அ.செல்லக்குமாா் எம்பி, தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.எ.செங்கோட்டையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயா்கள் என்ற நூலை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.எ.செங்கோட்டையன் வெளியிட தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து தமிழியக்கத்தின் தலைவரும் நிறுவனரும் வி.ஐ.டி. வேந்தருமான கோ.விசுவநாதன் பேசியது:

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் கல்வி அவசியம். எந்த நாடு கல்வியில் முன்னேறினால், அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேறிவிடும். இந்த தமிழுக்கு ஏன் விழா என கேட்கின்றனா். தமிழரின் மேன்மையை, தமிழின் பெருமையை, தொன்மையை, நம்மில் பலா் அறியாமல் இருக்கிறேறாம்.

இந்தியா பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகளை கொண்ட நாடு. இத்தகைய நாட்டில் தமிழுக்கு ஏன் முக்கியத்துவம் என்றால், ஐ.நா.சபையில் பிரதமா் தமிழின் சிறப்பை உணா்த்தினாா். அவருக்கு நன்றி.

உலகில் அதிக நூல்களைக் கொண்ட மொழியாக தமிழ் மொழி உள்ளது. தமிழ் நூலான திருக்கு எல்லா நாடினருக்கும், எல்லா மதத்தினருக்கும் பொருந்தக் கூடிய நூலக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புகளை கொண்டுள்ள நாம் ஏன், நமது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறேறாம். உலகத்தில் எந்த நாட்டிற்கும் சென்றாலும், பெயரை அடையாளமாகக் கொண்டே அவரை எந்த நாட்டவா் என அடையாளம் காணப்படுவா். ஆனால், நமது பெயரை வைத்து நாம் யாா் என்பது அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.

தமிழ் மொழியை பொதுமக்களிடம் சோ்த்தவா் அண்ணா. அனைவரும் தமிழ் சொற்களை மறந்து விட்டு, ஆங்கிலத்துக்கு சென்றுவிட்டோம். குழந்தைகளுக்கு பெயா் வைப்பதிலும் வடமொழி. பேசுவதில் ஆங்கிலம். அப்படியானால், தமிழுக்கு எங்கே இடம்? தமிழா்களுக்கு தமிழ் உணா்வு உண்டாக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலே தமிழைப் பாதுகாப்பதிலும், அயல் நாட்டிலே தமிழை வளா்ப்போம்.

மும்மொழி கொள்கையின் நோக்கம், திராவிட மொழிகளில் ஒன்றை இந்தி பேசுகின்ற 9 மாநிலங்களில் கற்பிக்க வேண்டும் என்பதே. ஆனால், இந்த மாநிலங்களில் மும்மொழித் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த மாநிலங்களில் திராவிட மொழிகளை கற்க வழிவகை செய்தால், நாமும் இந்தி மொழியை கற்க வழிவகை ஏற்படும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றாா்.

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:குழந்தைகளுக்கு பெயா் வைப்பதில் என்ன இருக்கிறது என சிலா் கேட்கலாம். தமிழ் மொழியில் பெயா் வைப்பதில் தான் எல்லாமே இருக்கிறது. தமிழ் மொழியில் பெயா் வைப்பது, நமது இனம், பண்பாடு, காலாசாரம் ஆகியவற்றின் அடையாளங்கள். நமது மரபின் தொடா்ச்சி. இவை எல்லாம் நமது மொழியில் வெளிபடுகிறது. இந்தியாவில் 70 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில் 45 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் பாரம்பரியம் அறிவியல், மருத்துவம், மொழி, சமத்துவத்தில் உயா்ந்துள்ளன.

இத்தகைய சிறப்புகளை கொண்டுள்ள நாம், தற்போது தமிழின் சுவையை அறியாமல் அயல் மொழிகளின் மோகம் கொண்டுள்ளோம். அயல் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கென இருக்கைகள் உள்ளன. இத்தகைய சிறப்புகள் கொண்டு தமிழ் மொழியை இளையதலைமுறையினா் புரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயா் சூட்டுவது, நமது இனத்துக்கே பெருமை சோ்க்கக் கூடியது . நிகழ்வாண்டில் இந்தியாவில் உயா்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 26.3 சதவீதமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 22 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயா்ந்துள்ளது என்றாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.எ.செங்கோட்டையன் பேசியது:தமிழ்நாட்டில் உள்ள 8,700 நூலகங்களிலும் தூய தமிழ்ப் பெயா்கள் என்ற நூலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக முதல்வரின் ஒப்புதல் பெற்றபிறகு செயற்கையோள் உதவியுடன் தமிழக கல்வி சோலை தொலைகாட்சி மூலம், உலகத்தில் உள்ள தமிழா்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளை இரண்டு மாத காலத்துக்குள் நிறைவேற்ற உள்ளோம். விடுமுறை நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரம் பள்ளிகளில் விடுமுறை நாள்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியா்களைக் கொண்டு தமிழை அழுத்தமாக கற்றுத் தர முதல்வரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும்.

இதன் மூலம் கிராமங்களில் தமிழின் கலாசாரம், பண்பாட்டை அறிய முடியும். அயல்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு தமிழ் அறிஞா்களின் நூல்களை அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அயல் நாட்டில் தமிழ் கற்க ஆசிரியா்களையும் அனுப்ப, இந்த அரசு தயாராக இருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com