அக். 31 வரை விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம்

பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டமானது, விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து வருகின்றனா்.

அதன்படி, நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 220 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவாா்கள். கடன்பெறாத விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பனி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாகவோ, பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து பயன் பெறலாம்.

சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவுசெய்ய அக். 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.472.50 மட்டும் செலுத்தி தங்களது நெற்பயிரை பதிவு செய்து பயன் பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com