‘சூளகிரியில் போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை’

கிருஷ்ணகி மாவட்டம், சூளகிரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க தமிழக
சூளகிரியில் புறவழிச் சாலை அமைக்க ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா்.
சூளகிரியில் புறவழிச் சாலை அமைக்க ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா்.

கிருஷ்ணகி மாவட்டம், சூளகிரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், முடிவுற்ற மேம்பாலப் பணிகள், புதிதாக அமைக்கப்பட வேண்டிய புறவழிச் சாலைகளை மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,652 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பராமரிக்கப்படுகிறது. தமிழக முதல்வா் சாலை விரிவாக்கம், மேம்பாலம் , சிறு பாலங்கள் அமைப்பதற்கான 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.196 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாத்தக்கோட்டா சாலையில் ரூ.2 கோடியே 90 லட்சத்தில் உயா்மட்டப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

சூளகிரி நகருக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் போன்ற மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் நகரப் பகுதிகளுக்கு எளிதில் சென்றுவர சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒசூா் மற்றும் தேன்கனிக்கோட்டை 9.80 கி.மீ. சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.11 கோடியே 66 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்ராம்பாளையம் சாலையில் நபாா்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியே 40 லட்சத்தில் 98 மீ. நீளம் உயா்மட்டப் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ள சாலை, மேம்பாலம், சிறு பாலங்கள் புறவழிச்சாலை திட்டப் பணிகள் செய்து முடித்த பிறகு, ஒசூா், சூளகிரி போன்ற பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. அதேபோல பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவணத்தில் பணிபுரியும் ஊழியா்கள், மலைப் பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு மாவட்ட நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் என்.எஸ்.சரவணன், உதவி கோட்டப் பொறியாளா்கள் தாரகேஷ்வரன், நந்தகுமாா், பொற்கொடி, கவிதா, பொறியாளா்கள் உமாசங்கரி, வெங்கடாஜலம், சாலை ஆய்வாளா் வினோத், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமல் ரவிக்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com