சாரண, சாரணியர்களுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணிய சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டில், சாதனை படைத்த கிருஷ்ணகிரி சாரணர்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, பாராட்டினார்.

சென்னையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணிய சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டில், சாதனை படைத்த கிருஷ்ணகிரி சாரணர்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, பாராட்டினார்.
 சென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் அன்பு, முத்து, சக்திகுமரன், கோகுல்ராஜ், ஆகாஷ், ஹேஷ்வர், முகேஷ்வர், தினேஷ், புனிதா, நிவேதா, செல்வராணி, புன்னகை அரசி, மாகாலட்சுமி, ஷாபியா தாஜ், ரேவதி, ஷாலினி ஆகியோர் பங்கேற்றனர்.
 தமிழர்களின் பாரம்பரியக் கலைகள், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்றன. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ, மாணவியர் உடல்திறன் காட்சிகள், கலாசார அணிவகுப்பு, உணவுத் திருவிழா, நாட்டுப்புறக் கலைகள், வீரதீர செயல்கள் போன்றவற்றில் முதலிடம் பெற்றனர்.
 போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பாராட்டினார். அப்போது, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஹெலன் மேரி, மாவட்ட சாரணர் சங்கச் செயலர் சர்வேசன், நல்லாசிரியர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com