குடிநீர்த் தட்டுப்பாடு: அவதானப்பட்டி ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர எம்எல்ஏ உறுதி

பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க அவதானப்பட்டி, கட்டாகரம் ஏரிகளிலிருந்து

பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க அவதானப்பட்டி, கட்டாகரம் ஏரிகளிலிருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பர்கூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து எம்எல்ஏ ராஜேந்திரன் குறைகளைக் கேட்டு வருகிறார். மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பெருகோப்பனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற குறைகேட்பு முகாமில் குடிநீர், பாசனக் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். 
அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களைச் சந்தித்து மனுக்களை பெற்ற சி.வி.ராஜேந்திரன், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க, அவதானப்பட்டி, காட்டாகரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து தொகரப்பள்ளி, பண்டசீமனூர், ஜெகதேவி, அஞ்ஞர், சூலாமலை, மஜீத்கொல்லஅள்ளி, கொத்தப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com