பென்னாகரம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ இன்பசேகரன் ஆய்வு

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ இன்பசேகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ இன்பசேகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் சுகாதாரப் பராமரிப்பு, சிகிச்சை, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்திய அவர், நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, தரையில் படுத்து சிகிச்சை அளிப்பவர்களுக்கு உடனடியாக கட்டில் வழங்க அறிவுறுத்தினார். மேலும், சிடி ஸ்கேன்,எக்ஸ்ரே, ரத்த வங்கி ஆய்வகங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
பென்னாகரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இதேபோல மருத்துவமனையில் உடனடியாக கூடுதல் படுக்கைகள் எற்படுத்தி தர வேண்டும். சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே ஆகியவை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும். 
பொதுமக்களின் அவசியமான மருத்துவத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றாவிடில் திமுக தலைமையின் அனுமதி பெற்று பென்னாகரத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com