ஒசூரில் அறுவைச் சிகிச்சை  நிபுணர் சங்கம் தொடக்கம்

இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் ஒசூர்-கிருஷ்ணகிரி கிளை தொடக்க விழா ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் ஒசூர்-கிருஷ்ணகிரி கிளை தொடக்க விழா ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு தமிழ்நாடு அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எபினேஸ் பென்சாம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்கள் ராஜசேகர், சுந்தர்ராஜன், இளங்கோவன், பொன்ராஜ், விவேகானந்தன், சுப்பிரமணியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். குணம் மருத்துவமனை மருத்துவர் செந்தில் வரவேற்றார். ஒசூர்- கிருஷ்ணகிரி அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் தலைவராக மருத்துவர் பாலசுப்பிரமணியன், சங்கச் செயலாளராக குணம் மருத்துவமனை மருத்துவர் செந்தில், பொருளாளராக கலைச்செல்வன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஒசூர்-கிருஷ்ணகிரி அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு சூளகிரியை அடுத்த  மாரண்டப்பள்ளி கிராமத்தை தத்து எடுக்கப்பட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் இந்த கிராமத்துக்கு மாதம் ஒரு முறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என சங்கச் செயலாளர் மருத்துவர் செந்தில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com