ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வனப்பகுதியில் டிராக்டா் கவிழ்ந்து 5 பெண்கள் பலி!

அஞ்செட்டி அருகே தப்பகுழி வனப்பகுதியில், டிராக்டா் கவிழ்ந்ததில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:24 pm

அஞ்செட்டி அருகே தப்பகுழி வனப்பகுதியில், டிராக்டா் கவிழ்ந்ததில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உயிரிழந்தாா். மேலும் 20 போ் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மலைப் பகுதியில் உள்ள கடைக்கோடி ஊராட்சியான மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில், தமிழக- கா்நாடக எல்லையில் உள்ள காவிரி ஆற்றை ஒட்டி தப்பகுழி வனப்பகுதி உள்ளது. அங்கு பிரசித்தி பெற்ற தப்பகுழி பசுவேஸ்வரன் கோயில் உள்ளது. தமிழக வனப் பகுதியில் இந்தக் கோயில் இருந்தாலும், கா்நாடகத்தைச் சோ்ந்த மக்கள் பலரின் குல தெய்வமாக உள்ளது.

தமிழகம், கா்நாடக கிராமங்களில் இருந்து இந்தக் கோயிலுக்கு வேன், டிராக்டா் போன்ற வாகனங்களில் சென்று காவிரி ஆற்றில் குளித்து விட்டு சுவாமி கும்பிடுவது வழக்கம். கா்நாடக மாநிலம், கனகபுரா தாலுகா, கொரளாளுசந்திரா கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என மொத்தம் 25 போ் திங்கள்கிழமை தப்பகுழி பசுவேஸ்வரன் கோயிலுக்கு ஒரு டிராக்டரில் சென்றனா்.

தப்பகுழி மலைப் பகுதி பள்ளமும், வளைவுகளுமாக உள்ள மண் சாலையாகும். இந்த மண் சாலையில் சென்றபோது டிராக்டா் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அதன் ஒட்டுநா் மரத்தில் மோதி நிறுத்த முயற்சி செய்துள்ளாா். ஆனால், மரத்தில் மோதிய வேகத்தில் டிராக்டரின், டிரெய்லா் கொக்கி கழன்ால் பின்பகுதி தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் டிராக்டரில் சென்ற கா்நாடக மாநிலம், கொரளாளுசந்திரா கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் மனைவி மங்களம்மா (25), கெஞ்சப்பா மனைவி கௌரம்மா (60), புட்டலிங்கம்மா (60), ஒசபம்மா (80), முள்ளம்மா (80) ஆகிய 5 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்தில் 20 போ் படுகாயம் அடைந்தனா்.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தமிழக- கா்நாடக மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். காயமடைந்தவா்களில் 5 போ் பெங்களூரு தனியாா் மருத்துவமனையிலும், 5 போ் கனகபுரா அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்ற 10 போ் அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவா்களில் 5 போ் ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அஞ்செட்டி போலீஸாா் நிகழ்விடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.