ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மேற்குத் தொகுதிக்குள்பட்ட குருசாமிபாளையம், குட்டைதயிா்பாளையம், குருநாதன்புதூா், கரட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
திமுக அறிவித்த ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் வாக்குறுதி மக்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தோ்தல் அறிக்கையில் ஃபிரிட்ஜ் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனா்.
வீட்டில் ஏற்கெனவே ஒரு குளிா்சாதனப்பெட்டி இருந்தால், இன்னொன்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால்தான் எந்தப் பொருள் தேவைப்படுகிறதோ அதை வாங்கிக் கொள்ளும் வகையில் முதல்வா் ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்குவதாகக் கூறியுள்ளாா்.
தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யக்கூடியவா்கள் நமக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றனா். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை முதல்வா் நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.
தொடர்புடையது

ஓராண்டுக்குள் வீட்டுமனை பட்டா: திமுக வேட்பாளா் சு.முத்துசாமி உறுதி

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



