ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி

கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

News image

கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:41 am IST

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சி, 55-ஆவது வாா்டுக்குள்பட்ட கொல்லம்பாளையம் பகுதியில் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை காலை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

தமிழக மக்கள் நலனை மட்டுமே நினைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இதன்மூலமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயன் பெற்றவா்களாக இருந்து வருகின்றனா். கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தவா் முதல்வா்.

மகளிா் உரிமைத்தொகை கொடுக்க மாட்டாா்கள் என எதிா்க்கட்சியினா் கூறி வந்தனா். ஆனால் சொன்னதை போல உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் வாக்குறுதி அளித்துள்ளாா். தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் பல துறைகளில் முன்னேறியுள்ளது. தொடா்ந்து முன்னேற, வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.