பஞ்சாங்கம்

ஞாயிற்றுக்கிழமை

20

விகாரி ஆண்டு, ஐப்பசி 3-ம் தேதி

நல்ல நேரம்

காலை 6.00 - 7.00   மாலை 3.00 - 4.00

ராகு காலம்

4.30 - 6.00

எம கண்டம்

12.00 - 1.30

குளிகை

3.00 - 4.00

திதி

ஸப்தமி

நட்சத்திரம்

திருவாதிரை

சந்திராஷ்டமம்

மூலம், பூராடம்

இன்றைய ராசிபலன்

மேஷம் - நற்செயல்
ரிஷபம் - பரிசு
மிதுனம் - பணிவு
கடகம் - நட்பு
சிம்மம் - சுகம்
கன்னி - உதவி
துலாம் - விருத்தி
விருச்சிகம் - உயர்வு
தனுசு - சாந்தம்
மகரம் - முயற்சி
கும்பம் - ஈகை
மீனம் - மறதி

யோகம்: அமிர்த சித்த யோகம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

விசேஷம்: சூரிய வழிபாடு நல்லது. 

கேள்வி - பதில்
 • இன்ஜினியரிங் படிப்பு முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்ற என் மகனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்? ஆயுள் எவ்வாறு உள்ளது? வீடு கட்டும் யோகம் உள்ளதா? மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு உள்ளதா?
   - வாசகர், மண்மங்கலம்

 • உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் புதபகவான்கள் லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகரையும் தைரிய ஸ்தானத்தையும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். கஜகேசரி யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அதனால் உத்தியோகத்தில் சிறப்பாக முன்னேறிவிடுவார். தற்சமயம் அஷ்டலட்சுமி யோகம் பெற்றிருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதால் சொந்த வீடு கட்டும் பாக்கியம், வெளிநாடு செல்லும் யோகம் ஆகிய பாக்கியங்கள் உண்டாகும். வெளிநாடு சென்று மேற்படிப்பும் படிக்கலாம். பரிகாரம் எதுவும் தேவையில்லை.
   
   

 • எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய பெண், எத் திசையில் அமைவார்? 12-இல் செவ்வாய், தோஷமா? வேலையில் இடம் மாற்றம் ஏற்படுமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்?
   - வாசகர், கோயம்புத்தூர்

 • உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப, லாபாதிபதி மற்றும் கேது பகவான் ஆகியோர் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பத்தாம் வீட்டில் சூரியபகவான் திக்பலம் பெறுவது சிறப்பாகும். பூர்வபுண்ணிய அஷ்டமாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டையும். எட்டாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, சுக்கிர பகவான்களையும் பத்தாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, புத, கேதுபகவான்களையும் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதி சனிபகவான் களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி, மூலதிரிகோணம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகங்களிலொன்றான சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். தற்சமயம் கேது மகா தசை முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் தெற்கு தென் கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். செவ்வாய் தோஷம் இல்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு வேறு நல்ல வேலைக்கு மாறுவார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஜாதகத்தில் தோஷங்கள் இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? உறவில் பெண் அமையுமா? வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதா?
   - வாசகி, அம்பை

 • உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தைப் பெறுகிறார். இவர்களுடன் சூரிய, ராகுபகவான்களும் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சம தோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். அந்நியத்திலிருந்து பெண் அமையும். வெளிநாடு சென்று தங்கி பொருளீட்டும் யோகமும் உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • எனது மகன் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்தது. இவரது போட்டியாளருக்கு பதவி உயர்வு கிடைக்காததால் இவருக்கு பலவிதத்திலும் தொந்ததரவு கொடுத்து வருகிறார். இதனால் என் மகன் பல மாதங்களாக நிம்மதியில்லாமல் இருக்கிறார். இந்த தொல்லைகள் எப்போது முடிவுக்கு வரும்? எனது பேரன்களின் படிப்பு, ஆரோக்கியம், குடும்பத்தின் வருங்காலம் எப்படி இருக்கும்?
   - வாசகர், திருச்சி

 • உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம், சுகாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். தைரியாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகத்தைப் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். களத்திர நட்பு ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் லாப ஸ்தானத்தையும் அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனிபகவானையும் லக்னத்தையும் பார்வை செய்கிறார். இதனால் அனைத்து எதிர்ப்புகளையும் போட்டிகளையும் எதிர்த்து நின்று வெற்றி பெற்று விடுவார் என்று கூற வேண்டும். தற்சமயம் சனிபகவானின் தசையில் சந்திர புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்ப்புகளும் தானாகவே மறைந்து விடும். புத்திர ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் குழந்தைகளும் நல்ல நிலையை எட்டி விடுவார்கள். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரச் சொல்லவும். அவரின் குடும்ப எதிர்காலம், ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும்.

 • எனது திருமணம் இந்த வருடமாவது நடக்குமா? எனது சினிமா முயற்சியில் வெற்றி உண்டா? என்ன தொழில் செய்யலாம்? நிரந்தர வேலை கிடைக்க என்ன செய்யலாம்?
   - வாசகர், வடபழனி

 • உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். அவருடன் தொழில் ஸ்தானாதிபதியும் இணைந்திருக்கிறார். குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதியான சந்திரபகவான் சனிபகவானுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். களத்திர, நட்பு மற்றும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும்.

 • எங்கள் பூர்வீகமான காலி மனையுடன் கூடிய கட்டடம் சுமார் 20 ஆண்டுகளாக நல்ல வருமானம் இல்லாமல் உள்ளது. அதன் மூலம் நேர்மையான வருமானம் எப்போது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகர், எட்டயபுரம்

 • உங்களுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிலும் தன, பூர்வபுண்ணியாதிபதி அயன ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். தர்மகர்மாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதும் சூரிய, குருபகவான்கள் லாப ஸ்தானத்திலும் இருப்பது சிறப்பாகும், இதனால் பூர்வீகச் சொத்தின் மூலம் வருமானம் உண்டு என்று கூறவேண்டும். தற்சமயம் சனிபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பூர்வீகச் சொத்திலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வழிபட்டு வரவும்.

 • எனது தொழில் சித்த மருத்துவம். 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. இதுவரையிலும் வாடகை வீட்டில் தான் உள்ளேன். சொந்த வீடு அமையுமா? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? ஆயுள் எவ்வாறு உள்ளது?
   - வாசகர், சீர்காழி

 • உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி தன, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் கேதுபகவான்கள் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். சுக, பூர்வபுண்ணியாதிபதி அயன ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருக்கிறார். பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற லாபாதிபதியுடன் இணைந்திருக்கிறார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னம், தைரிய ஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாகத் தொடங்கும். 2024-ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடு வாங்கும் யோகமும் உள்ளது. இறுதிவரை யோக தசை நடக்கும். சொந்த ஊருக்குச் சென்று வசிக்கும்யோகமும் உள்ளது. பிரதி தினமும் விநாயப் பெருமானை வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக இருமல், தும்மல், சளி மற்றும் பல நோய்களால் சிரமப்பட்டு வருகிறார். மேலும் மெலிந்துள்ளதோடு மறதியும் சோம்பலும் இருக்கிறது. ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுகிறார். இப்படி பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. எப்போது உடல் ஆரோக்கியம் பெறுவார்?
   - வாசகர், கொரட்டூர்

 • உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னாதிபதியே ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். வியாதிக்கு ஆறாமதிபதியே காரணமாகிறார். லக்னமாகிய உயிர் ஸ்தானத்திற்கும் அதிபதியான கிரகம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. வியாதியாலும் பெரியதாக அவதிப்படமாட்டார். தன, பூர்வபுண்ணியாதிபதி தன ஸ்தானத்திலும், பாக்கியாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சமும் பெற்றிருக்கிறார். குருபகவானின் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், எட்டாம் வீட்டின் மீதும், பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் அவரின் ஜாதகம் சராசரிக்கும் கூடுதலான பலம் பெற்றிருக்கிறது என்று கூற முடிகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கும். அந்த காலகட்டத்தில் தற்சமயம் உள்ள உடலுபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • எனது இளைய மகனுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எல்லா பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? திருமணம் விரைவில் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகி, சென்னை

 • உங்கள் மகனுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குடும்பாதிபதியால் பார்க்கப்படுகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியால் பார்க்கப்படுகிறார். குருபகவானின் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் லக்னத்தின் மீதும் படிவதும் சிறப்பாகும். களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று சச மகாயோகத்தைப் பெறுகிறார். களத்திர காரகரும் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் செவ்வாய்பகவானின் தசையில் தைரிய, அயன ஸ்தானாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

 • எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எப்படிப்பட்ட பெண் அமைவார்? எதிர்காலம் எப்படி இருக்கும்?
   - வாசகர், திருவள்ளூர்

 • உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான குருபகவான் கர்ம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடனும் களத்திர ஸ்தானாதிபதியுடனும் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி சுப பலம் பெற்றிருப்பதாலும் தற்சமயம் புதமகா தசை நடப்பதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுந்த பெண் அருகிலேயே அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
   

 • என் மகனுக்கு 44 வயதாகிறது. அமெரிக்காவில் வசிக்கிறான். சென்ற மாதம் பேஸ்மெண்டில் தனியாக இருந்தபோது கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு மயக்கம் அடைந்துவிட்டான். ரத்தமும் வெளியேறி உறைந்துவிட்டது. யாருக்கும் தெரியாததால் அரைமணிக்கும் மேல் கழித்து பார்த்து மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தோம். பழைய நினைவுகள் மறந்து விட்டது. ஏதேதோ பேசுகிறான். எப்பொழுது முன்போல் ஆவான். பழைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வருமா? வேலைக்கும் செல்ல முடியுமா? ஜாதகம் வலுவாக உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகர்

 • உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். தைரிய முயற்சி வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். மூன்றாமதிபதி மறைவு ஸ்தானத்திற்கு அதிபதியாகி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் இருப்பது விபரீத ராஜயோகத்தையும், எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத வகையில் புதிய வாய்ப்புகளும் திருப்பங்களும் உண்டாகும். பொதுவாக, சந்திரபகவான் மனோகாரகராவதால் அவர் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது அவரின் மனோதைரியம் சுபபலத்துடன் இருக்கிறது என்றும் அசட்டு தைரியம் என்பார்களே அதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு தீர்க்கமாகச் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் உண்டாகும். அன்னை காரகராகவும் ஆவதால் அன்னையின் நிலைமையும் இறுதிவரை சுபமாகவே அமையும். லக்னமான உயிர் ஸ்தானத்திற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
   லக்னாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதியான சனிபகவானின் சாரத்தில் பலம் பெற்று அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பாகும். இதனால் களத்திர பாவமும் லக்ன பாவமும் வலுக்கிறது என்று கூறவேண்டும். ஆறாம் வீட்டிற்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் இருப்பதால் ஆறாமதிபதியின் பலம் கூடுகிறது என்றும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இது "பாவாத்பாவம்' என்கிற ஜோதிட அடிப்படையில் பார்க்கப்படுகிறது. லக்னாதிபதியே ஆறாமதிபதியாக ஆவதால் ஆறாமதிபத்யத்தால் உண்டாகக் கூடிய கெடுபலன்கள் பெரிதாக ஏற்படாது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) மறைவு பெற்று நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். "மறைந்த புதன் நிறைந்த மதி' என்பது ஜோதிட வழக்கு. அதனால் புதபகவானின் அறிவு ஆற்றல் காரகத்துவங்கள் குறைந்து விடாது.
   பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு ராசியான ரிஷப ராசியை அடைகிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டைப் பார்வை செய்வதால் ஆயுள் தீர்க்கமாகும். மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டையும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டையும் பார்வை செய்கிறார். சனிபகவான் வலுத்திருப்பதால் கடினமாக உழைக்கக் கூடிய சக்தி பிறக்கும். தன்னலம் இராது. மற்றையோருக்குத் தொண்டாற்றும் தகுதி உண்டாகும். சனிபகவானின் தசை புக்திகளில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
   அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்து இருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானின் மீதும் படிகிறது. கர்மகாரகரான சனிபகவானை குருபகவான் பார்ப்பது சிறப்பு. சனிபகவானை குருபகவான் பார்த்த ஜாதகங்கள் சோடை போனதில்லை என்பது அனுபவ உண்மை. சில காலங்களில் நலிவடைந்திருந்தாலும் பிற்காலத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட்டு முன்னேறிவிடுவார்கள். பலம் மிகுந்த குருவென்றால் அதாவது பார்வையின் மூலம் பரந்த உலகத்தையே பரிசாக வழங்கும் உன்னதமான தகுதியைப் பெற்றிருக்கும். சனிபகவான் சுபபலம் சிறப்பான வாழ்க்கைத் தரத்தைக் கொடுக்கும். அதோடு குரு பார்த்த சனிபகவான் இத்தகைய தரத்தை உறுதிசெய்யும் அமைப்பாகும் என்றால் மிகையாகாது. குருபகவானின் ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், புதன்களின் மீதும் படிகிறது. செவ்வாய்பகவானை பார்வை செய்வதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. புத்திர ஸ்தானாதிபதியை புத்திரகாரகர் பார்வை செய்வதால் பூர்வபுண்ணியம் வலுக்கிறது.
   சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். கேதுபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகுபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
   பொதுவாக, தலைக்கு சூரியபகவானைக் கூறினாலும் சில கிரந்தங்களில் மண்டை ஓட்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது லேசான காயங்கள், சிறிய அளவில் விரிசல் அதனால் வரும் உபாதைகளுக்கு சூரியபகவானே காரணமாகிறார். மூளையை குருபகவானை குறிக்கிறார். மூளையிலிருந்து செல்லும் நரம்பு மண்டலத்தை புதபகவானும், அதாவது மூளையிடும் கட்டளைகளைச் செயல்படுத்துவது நரம்பாகும். மூளைக்குச் செல்லும் ரத்தத்தை செவ்வாய்பகவானும், மூளையில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை சுக்கிரபகவானும் குறிக்கிறார்கள். மறதிக்கு சந்திரபகவான் காரணமாகிறார். நம் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலாபலன்களை சனிபகவான் மற்றும் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது பகவான்கள் அளிக்கிறார்கள்.
   ஜாதகத்தில் எந்தவிதமான கிரகங்கள் பலம் குறைந்திருக்கிறார்களோ அந்த கிரகங்களின் காரகத்துவங்கள் பாதிக்கப்படுகின்றன. சில பாதிப்புகள் தற்காலிகமானதும் சில நிரந்தரமான பாதிப்பையும் கொடுக்கின்றன. அவருக்கு சூரியன், குரு, புத பகவான்கள் நல்ல நிலையில் இருப்பதால் நிரந்தரமான பாதிப்பு ஏற்படாது. மேற்கூறிய கிரகங்களுடன் அனுகூலமற்ற கோசார நிலைமைகளும் ஓரளவுக்கு காரணமாகிறது. அவருக்கு தற்சமயம் ராகுமகா தசையில் குருபகவானின் புக்தியில் கேதுபகவானின் புக்தி இந்த மாதம் இறுதிவரை நடக்கும். அடுத்த மாதம் முற்பகுதிக்குள் அவருக்கு பழையபடி நினைவுகள் வந்து விடும். பயப்படும்படியாக எதுவும் இல்லை. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
   
   
   
   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை