மார்கழியில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

மார்கழி மாதத்தை நல்ல மாதம் அல்ல என்பது சரியா? இந்த மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது எனத் தெரிந்துகொள்ள...
markazhi
மார்கழி மாதம்
Updated on
2 min read

பொதுவாக சில மாதங்களில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள், அதில் குறிப்பாக இந்த மார்கழி மாதம். மார்கழி மாதத்தை அவ்வளவு நல்லதல்ல என்று சொல்வதுண்டு. இந்த மாதத்தில் பொதுவாக எந்தவித நல்ல காரியங்களையும் செய்வதைத் தவிர்ப்பார்கள். ஏன் என்று பார்க்கலாம்.

மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி மாதம். கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார். அப்படியென்றால் இந்த மாதத்துக்கு எவ்வளவு சிறப்புகள் இருக்கின்றன என்று பாருங்கள்.

இந்த மாதம் முழுவதும் எந்தவித கெட்ட சிந்தனைகளும் இல்லாமல், இறைவனின் நாமங்களையும், புராணங்களையும் மனப்பூர்வமாக பாராயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் மார்கழி ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்பேர்பட்ட இந்த மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மார்கழியில் செய்யக்கூடாதவை...

மார்கழி மாதத்தில் அதிகாலைக்குப் பிறகு தூங்கக் கூடாது. அதிகாலை நாலரை மணிக்கு குளிக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம். ஏனென்றால் அந்த நேரத்தில் இயற்கையிலிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய அதீதமான ஆக்சிஜன் சக்தி இந்த உடலுக்கு அந்த ஆண்டு முழுவதும் வேண்டும் என்கிற நலனை நமக்குத் தருகிறது. அதனால்தான் மார்கழி மாதத்தில் கட்டாயம் அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும்.

மார்கழி மாதத்தில் பொதுவாக விதை விதைக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் இது விதை வளர்வதற்கான காலம் அல்ல. அதனா் தான் மார்கழி மாதம் விதை விதைத்தால் அந்த விதை சரியான உயிர்த் தன்மைப் பெற்று வளராமல் போய்விடும் என்பதாலேயே அதிகமான திருமணங்கள் மார்கழி மாதத்தில் செய்யக்கூடாது என்று சொல்வார்கள்.

அடுத்து, மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக் கூடாது. பெண்கள் எல்லோரும் இதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கோலம் என்பது அழகுக்காக மட்டும் இடக் கூடிய விஷயம் அல்ல. அது தர்மத்திற்காக இடக் கூடியது. கோலம் பற்றி நிறைய விஷயம் சொல்லலாம்.

இப்படி இதையெல்லாம் மார்கழியில் செய்யக் கூடாது என்றால் அப்போ என்ன செய்யனும்..

மார்கழியில் செய்ய வேண்டியவை...

மார்கழியில் இறைவனின் திருநாமத்தை ஜபிக்கக் கூடிய பஜனையில் கலந்துகொள்ளலாம். 30 நாளும் தப்பாமல் கோதை நாச்சியாரின் திருப்பாவையும், சிவபெருமானின் திருவெம்பாவையும் கட்டாயம் படிக்க வேண்டும். ஒருவேளை பாசுரங்களைப் படிக்க இயலாதவர்கள் காதில் கேட்டலே புண்ணியம் கிட்டும். மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளி எழுச்சியும் கட்டாயம் படிக்க வேண்டும்.

பக்திக்குரிய மாதம், பணிவாக இறைவனைச் சென்று அடைவதற்குரிய மாதம். வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா என்கிற திருநாளும் வருகின்ற மாதம் இந்த மார்கழி மாதம்.

இதையெல்லாம் மார்கழி மாதத்தில் மகிழ்ச்சியாகப் புத்துணர்ச்சியாகக் கடைப்பிடித்து இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும் என்று பெருமாளின் அருட்கடாட்சத்தை நாம் பரிபூரணமாகச் சேவிப்போம்.

Summary

Let's find out what you can and cannot do during the month of Margazhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com