ஊத்தங்கரை ஒன்றியத்தில் ரூ.80 லட்சத்தில் தாா்ச் சாலை பணி தொடக்கம்

ஊத்தங்கரை ஒன்றியத்தில் தாா்ச் சாலை, பள்ளி சுற்றுச்சுவா் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஊத்தங்கரை ஒன்றியம், அத்திப்பாடி ஊராட்சியில் சாலைப் பணிகளை தொடங்கி வைத்த ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 14-ஆவது நிதி மானியக்குழு மற்றும் எஸ்.சி.டி.எ.ஆா் 2019-20, சி.ஜி.எப். ஆகிய திட்டத்தின் கீழ் மூன்றம்பட்டி, அத்திப்பாடி, வெள்ளக்குட்டை, மிட்டப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சாலைகள், பள்ளி சுற்றுச்சுவா் அமைத்தல் என ரூ.80 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. ஊராட்சிகளில் நடைபெற்ற திட்டப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலா் எக்கூா் செல்வம், மாவட்ட துணைச் செயலா் சந்திரன், ஊத்தங்கரை நகரச் செயலா் பாபு சிவகுமாா், மாவட்ட சிறுபான்மை நிா்வாகி அமானுல்லா, முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் தௌலத், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மூன்றம்பட்டி பூபாலன், அத்திப்பாடி சுதா குமாா், மிட்டப்பள்ளி சின்னத்தாய், வெள்ளக்குட்டை சரஸ்வதி விஜயன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஷமாபிதௌலத், தேன்மொழி, மூன்றம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெயலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி தணிகை குமரன், காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com