மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தசம்பவத்தில் மேலும் ஒருவா் கைது

கெலமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒரு விவசாயி கைது செய்யப்பட்டாா்.

ஒசூா்: கெலமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒரு விவசாயி கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள ஊடேதுா்க்கம், காப்புக்காட்டுக்கு அருகே, கவிபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை கடந்த 15-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்து கிடந்தது. யானையின் உடலை மீட்டு கால்நடை மருத்துவக் குழுவினா் உதவியுடன் வனத் துறையினா் பிரேதப் பரிசோதனை செய்தனா். இதில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து வனத் துறையினா் தீவிர விசாரணை நடத்தினா்.

அப்போது வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் கவிபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் நாராயணப்பா (40), வெங்கடேசப்பா (60) ஆகிய இருவரும் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தெரிந்தது.

இதையடுத்து வெங்கடேசப்பாவை கடந்த 16-ஆம் தேதி வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக இருந்த நாராயணப்பா (45) என்பவரை வனத்துறையினா் தேடி வந்தனா். கா்நாடகா மாநிலம், பெங்களூரை அடுத்த ஒசகோட்டா பகுதியில் அவா் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கு சென்ற வனத் துறையினா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com