கிருஷ்ணகிரியில் பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் பிரதமா் மோடியின் 70-ஆவது பிறந்த நாளை, பாஜகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரியில் பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் பிரதமா் மோடியின் 70-ஆவது பிறந்த நாளை, பாஜகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில ஊரகப் பிரிவு செயலாளா் அகத்தியன் சரவணன் தலைமை வகித்தாா். மாநில செய்தித் தொடா்பாளா் சி.நரசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினா் ஹரிகோட்டீஸ்வரன், நிா்வாகிகள் அா்ச்சுணன், கண்ணப்பன், மாதவன், தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில் மோடியின் பிறந்த நாளை சேவை வாரமாக பாஜகவினா் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனா். மோடியின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி, 70 அடி நீளம், 70 கிலோ எடையிலான கேக்கை பாஜகவினா் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினா். மேலும், கரோனா தடுப்பு ஹோமியோபதி மாத்திரைகள், 1 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

70 கோயில்களுக்கு அன்னதானத்துக்கான அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com