கிரானைட் கற்கள் கடத்தல்:2 லாரிகள் பறிமுதல்

பா்கூா் அருகே கிரானைட் கற்களைக் கடத்த பயன்படுத்திய 2 லாரிகளை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்த நிலையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே கிரானைட் கற்களைக் கடத்த பயன்படுத்திய 2 லாரிகளை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்த நிலையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநா் சுரேஷ் தலைமையிலான குழுவினா், பா்கூரை அடுத்த அச்சமங்கலம் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் அண்மையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வந்தனா். அப்போது, இரண்டு லாரிகளை சாலையோரமாக நிறுத்திய அதன் ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பி ஓடினா்.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், அந்த லாரிகளை சோதனை செய்ததில், கிரானைட் கற்களைக் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, லாரிகளின் உரிமையாளா்கள், ஓட்டுநா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com