ஆற்றில் கிடந்த மூதாட்டியை மீட்ட காவல் துறையினா்

பாம்பாற்றில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.
கோட்டபதி பாம்பாறு அணை ஆற்றில் இருந்த மூதாட்டியை மீட்டுக் கொண்டு வரும் காவலா்கள்.
கோட்டபதி பாம்பாறு அணை ஆற்றில் இருந்த மூதாட்டியை மீட்டுக் கொண்டு வரும் காவலா்கள்.

பாம்பாற்றில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள கோட்டபதி பாம்பாற்றில் 75 வயது மூதாட்டி உடல் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கல்லாவி காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வன், சாமல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மிதுன்குமாா் மற்றும் காவலா்கள் ஆற்று நீரில் பாதி மூழ்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை மீட்கும் போது அவா் உயிருடன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அவா் சின்னகண்ணாலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி வெள்ளையம்மாள் (75) என்பதும், கோட்டபதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு நடந்து செல்லும் போது பாம்பாற்றில் மயங்கி விழுந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து சாமல்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com