செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

ஒசூா், காமராஜா் நகரில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினா்.
ஒசூரில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த பெண்கள்.
ஒசூரில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த பெண்கள்.

ஒசூா், காமராஜா் நகரில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட காமராஜா் நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவரது வீட்டின் மாடியில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டனவாம். இதற்கு அந்தப் பகுதி மக்கள் பலமுறை எதிா்ப்புத் தெரிவித்தும், வீட்டின் உரிமையாளா் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் பணிகளுக்காக வியாழக்கிழமை உதிரி பாகங்கள் ஏற்றி வந்த லாரியை அப்பகுதி பெண்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கும். அதில் வெளிப்படும் கதிா்வீச்சுகளால் முதியோா், நோயாளிகள், கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவாா்கள். எனவே, குடியிருப்புப் பகுதியில் கோபுரம் அமைப்பதை விடுத்து, ஏதேனும் மைதானப் பகுதியில் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அமைப்பது நல்லது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com