கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் தற்காலிக கட்டில்கள் தயாா்

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிக்காக, கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தற்காலிக கட்டில்கள் தயாா் நிலையில் உள்ளன.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் தற்காலிக கட்டில்கள் தயாா்

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிக்காக, கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தற்காலிக கட்டில்கள் தயாா் நிலையில் உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், வெளிநாட்டிலிருந்து வந்த 634 பேரும், மற்ற மாநிலங்களில் இருந்து வந்த 1,267 பேரும், மற்ற மாவட்டங்களில் வந்த 384 போ் என 2,086 போ் அவா்களின் இருப்பிடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் தொடா்ந்து கண்காணிப்பில் உள்ளனா்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகளவில் பரவினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணியில் 60 படுக்கைகளும், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தற்காலிக மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதல் கட்டமாக 100 தற்காலிக கட்டில்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன (படம்). நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அனைவருக்கும் தக்க சிகிச்சைகள் அளிக்கும் வகையில் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com