கிருஷ்ணகிரியில் வீடுதேடி காய்கனி விநியோகம் செய்யும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளில் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்பெறும் வகையில், வீடுதேடி வரும் அம்மா காய்கனி விநியோகத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகரில் செயல்பாட்டுக்கு வந்த வீடு தேடிவரும் அம்மா காய்கனி விநியோகத் திட்ட வாகனத்தில் காய்கறி வாங்கும் பெண்கள்.
கிருஷ்ணகிரி நகரில் செயல்பாட்டுக்கு வந்த வீடு தேடிவரும் அம்மா காய்கனி விநியோகத் திட்ட வாகனத்தில் காய்கறி வாங்கும் பெண்கள்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளில் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்பெறும் வகையில், வீடுதேடி வரும் அம்மா காய்கனி விநியோகத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், தினசரி காய்கறிச் சந்தையானது கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வளாகம், உழவா் சந்தை என பிரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

மேலும், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்கும் வகையில், கிருஷ்ணகிரி நகராட்சியின் மற்றொரு முயற்சியாக வீடுதேடி வரும் அம்மா காய்கனி விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு இரு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனைக்காக வீடு தேடி வரும். அப்போது, தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சந்திரா தெரிவித்தது: கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்கும் வகையில், புதிய முயற்சியாக வீடுதேடி வரும் அம்மா காய்கனி விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இரு வாகனங்களில் காய்கனிகள் விற்பனை செய்யப்படும், பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்தே மேலும் இந்த திட்டம் நீட்டிக்கப்படும்.

இந்த காய்கனிகளை நகராட்சிப் பணியாளா்கள், மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து உழவா் சந்தையின் விலைப் பட்டியலின்படி விற்பனை செய்வா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com