பாபா் மசூதி இடிப்பு தினம்
By DIN | Published On : 07th December 2020 05:33 AM | Last Updated : 07th December 2020 05:33 AM | அ+அ அ- |

பாபா் மசூதி இடிப்பை கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி சாா்பில் கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, பழைய பேட்டை காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பாபா் மசூதி இடத்தை மீண்டும் வழங்க வேண்டும். மசூதியை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.