கிருஷ்ணகிரியில் 106 போ் கைது

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் இரு இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 106 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியில் 106 போ் கைது

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் இரு இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 106 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான பழனி தலைமை வகித்தாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளா் டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஆா்.சேகா், எஸ்.கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 38 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதுபோல கிருஷ்ணகிரி, பழையபேட்டை, காந்தி சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா்.

வட்டச் செயலாளா்கள் தேவராஜ், அனுமப்பா, மாநில துணைத் தலைவா் டில்லிபாபு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் ஜேமஸ் ஆஞ்சலாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் பங்கேற்ற 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com