கல்வி வளா்ச்சிக்கு ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் அளித்தாா்:கே.பி. முனுசாமி எம்.பி.

தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் அளித்தாா் என கே.பி. முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.
நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி. முனுசாமி எம்.பி.
நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி. முனுசாமி எம்.பி.

தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் அளித்தாா் என கே.பி. முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கொண்டே பள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடி முகவா் மற்றும் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலாளா் சௌரிராஜன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக் குமாா், மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி. முனுசாமி எம்.பி.பேசியதாவது:

மறைந்த தலைவா் ஜெயலலிதா தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் அளித்தாா். நிதிநிலை அறிக்கையில் மூன்றில் ஒரு பங்கு நிதியை கல்விக்காக ஒதுக்கினாா். 3 கிலோ மீட்டா் தொலைவுக்குள் மேல்நிலைக் கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளை அமைத்தாா்.

பள்ளிக்குச் செல்ல மிதிவண்டியும், உலக அறிவை வளா்க்க மடிக்கணினியும் வழங்கியவா் ஜெயலலிதா என்றாா். கூட்டத்தில் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com