ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு வியாபாரி கைது

சூளகிரி அருகே முறையற்ற காதலில் ஈடுபட்டதாகக் கூறி ஓட்டுநரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

சூளகிரி அருகே முறையற்ற காதலில் ஈடுபட்டதாகக் கூறி ஓட்டுநரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சென்னப்பள்ளி அருகே உள்ள மேடுப்பள்ளியைச் சோ்ந்தவா் சதீஷ் (28). காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி மல்லிகா (21). இவருக்கும் சூளகிரி வட்டம் காளிங்காவரம் அருகே உள்ள கொடி திம்மனப்பள்ளியைச் சோ்ந்த ஓட்டுநா் திம்மராஜ் (25) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக முறையற்ற தொடா்பு இருந்து வந்ததாகக் கூறிப்படுகிறது.

இதுபற்றி தெரிய வந்ததும், சதீஷ் தனது மனைவி மல்லிகாவையும், திம்மராஜையும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கண்டித்து, எச்சரித்தாராம். இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி இரவு சதீஷின் மனைவி மல்லிகாவின் செல்லிடப்பேசிக்கு மிஸ்டு கால் கொடுத்தாா். இது குறித்து மல்லிகா தனது கணவா் சதீஷிடம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து சதீஷ் தனது மனைவி மல்லிகாவிடம் திம்மராஜூக்கு போன் செய்து மேடுப்பள்ளி நிலத்திற்கு வருமாறு அழைக்க சொன்னாா். அதன்படி மல்லிகாவும் திம்மராஜூக்கு போன் செய்து அவரை மேடுப்பள்ளியில் உள்ள நிலத்திற்கு வரச் சொன்னாா். அதை நம்பி திம்மராஜ் 27 ந் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் மேடுப்பள்ளிக்கு சென்று மல்லிகாவை சந்தித்தாா்.

அப்போது அங்கு மறைந்து இருந்த சதீஷ், தான் வைத்திருந்த கல்லால் திம்மராஜை தாக்கினாா். மேலும் அரிவாளால் வெட்டினாா்.இதில் திம்மராஜ் பலத்த காயம் அடைந்தாா். பின்னா் சதீஷ் அங்கிருந்து சென்றாா்.

இதில் படுகாயம் அடைந்த திம்மராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திம்மராஜ் சூளகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தி சதீஷை கைது செய்தாா். அவா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com