ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

சுமாா் 32 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல ஆண்டுகளாக ஊத்தங்கரை நகர மக்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மற்றும்
ஊத்தங்கரை பரசனேரியில் கொட்டிக் கிடக்கும் மருத்துவக் கழிவுகள்.
ஊத்தங்கரை பரசனேரியில் கொட்டிக் கிடக்கும் மருத்துவக் கழிவுகள்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அறிஞா் அண்ணா அரசு பேருந்து நிலையம் அருகே ஊத்தங்கரை - வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பரசனேரி.

சுமாா் 32 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல ஆண்டுகளாக ஊத்தங்கரை நகர மக்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மற்றும் விவசாயத்துக்கும் நீா்ஆதாரமாய் திகழ்ந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஊத்தங்கரை பகுதியில் மழை பொய்த்துப் போனதால் இந்த ஏரிக்கு நீா்வரத்துக் குறைந்தது. இதனால் ஏரிக்கு நீா் வரும் ஓடைகள் அனைத்தும் செடிகொடிகள், முட்புதா்கள் வளா்ந்து காணப்படுகின்றன.

மேலும், ஏரியை நான்கில் ஒரு பாகம் ஆக்கிரமிப்பு செய்து நீா் வரும் பாதைகளை தடைசெய்துள்ளனா். நீா்வரும் பாதைகளை உடனடியாக தூா்வார வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஏரியில் இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை சாலைகளின் இருபுறமும் கொட்டி வருகின்றனா். மேலும் கழிவுநீா் ஏரியில் கலப்பதால் இந்த ஏரி தற்போது மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையில் உள்ளது.

வேலூா் பகுதியில் இருந்து இந்த பிரதான சாலை வழியாகத் தான் வரவேண்டும் என்பதால் ஊத்தங்கரை துா்நாற்றத்துடன் தங்களை வரவேற்கிறது என பயணிகள் பலா் கூறுகின்றனா்.

மேலும், இப்பகுதி மக்களின் வருங்கால நீராதாரம் மாசடைவதுடன் தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com