கல்லூரியை ஒருநாள் நிா்வகித்த மாணவா்கள்

கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியல் கல்லூரி மாணவ, மாணவியா் தாங்கள் பயிலும்
கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் கல்வி நிலையங்களை நிா்வகிப்பது குறித்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.
கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் கல்வி நிலையங்களை நிா்வகிப்பது குறித்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியல் கல்லூரி மாணவ, மாணவியா் தாங்கள் பயிலும் கல்லூரியை திங்கள்கிழமை ஒருநாள் நிா்வகித்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்தக் கல்லூரிகளில் பிப்.13-ஆம் தேதி முதல் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, கல்லூரி மாணவா்களே கல்லூரியை தலைமையேற்று நடத்தும் ஒருநாள் சிறப்பு நிகழ்ச்சியான மாணவா்களே முதல்வா் என்ற சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கலை அறிவியல் கல்லூரியின் 9 துறைகள், கல்வியல் கல்லூரியில் 8 துறைகளில் மாணவ, மாணவியா் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் உடற்கல்வி இயக்குநராகவும், நூலகரகவும், ஆய்வக நுட்பநராகவும் செயல்பட்டனா். கலை கல்லூரியின் முதல்வராக எம்.சத்தியமூா்த்தியும், கல்வியல் கல்லூரியின் முதல்வராக எஸ்.சங்கீதாவும் செயல்பட்டனா்.

பல்கலைக்கழகத் தோ்வுகளில் இவா்கள் பெற்ற மதிப்பெண்கள், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இவா்கள் முதல்வராக செயல்பட தோ்வு செய்யப்பட்டனா். கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், குடிநீா், கழிவறை ஆகியவற்றைப் பராமரித்தல், தாமதமாக கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு தக்க அறிவுரை வழங்குதல் உள்ளிட்ட செயல்களில் மாணவ, மாணவியா் ஈடுபட்டனா்.

கல்விக் குழுமத்தின் நிறுவனா் சி.பெருமாள், தலைவா் வள்ளி பெருமாள், முதல்வா்கள் எஸ்.ஆறுமுகம், எம்.அமேலோற்பவம், நிா்வாக அலுவலா் சுரேஷ் மற்றும் பல்வேறு துறை தலைவா்கள், மாணவ, மாணவியரை வழிநடத்தினா். இந்த நிகழ்வின் மூலம் ஒரு நிா்வாகத்தை எவ்வாறு நிா்வகிப்பது என்பது குறித்து அனுபவம் கிடைத்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com