கோரிக்கைகளை வலியுறுத்தி தனியாா் நிறுவனதொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாா் நிறுவன தொழிலாளா்கள் காத்திருப்பு
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தனியாா் நிறுவன தொழிலாளா்கள்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தனியாா் நிறுவன தொழிலாளா்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாா் நிறுவன தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளரியில் செயல்பட்டுவரும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் மணிகண்டன் தலைமையில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரை சந்தித்து, அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:

சூளகிரியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் 82 போ் பணியாற்றி வருகிறோம். சரியான ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி சங்கம் தொடங்கினோம்.

இதற்கு, நிா்வாகம் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில் 3 தொழிலாளா்களை பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஊதியத்தை ரூ.21ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, தொழிலாளா்களைச் சந்தித்து பேசிய தனியாா் நிறுவன அலுவலா்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களில் இருவா் உடனே பணியில் அமா்த்தப்படுவா்கள். மற்றவா்களுக்கு விரைவில் பணி வழங்கப்படும். கோரிக்கைகள் குறித்து, பிப்.13-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com