அரசுப் பள்ளிக்கு அறிவியல் செயல்முறை பயிற்சி உபகரணங்கள் வழங்கல்

நடுபையூரில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அறிவியல் செயல்முறை பயிற்சி உபகரணங்கள், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் அண்மையில் வழங்கப்பட்டன.
13kgp3_1302dha_120_8
13kgp3_1302dha_120_8

நடுபையூரில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அறிவியல் செயல்முறை பயிற்சி உபகரணங்கள், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் அண்மையில் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், நடுபையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 400 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்துக்கு அறிவியல் செயல்முறை பயிற்சி உபகரணங்கள் தேவை என பள்ளியின் தலைமையாசிரியா் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தை அணுகினாா்.

இதையடுத்து ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில், ரூ.50 ஆயிரம் நன்கொடையாக அளிக்கப்பட்டது. பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் இ.மாதவன் மேலும் ரூ.50 ஆயிரம் வழங்கியதையடுத்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான அறிவியல் செயல்முறை பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பள்ளியின் தலைமையாசிரியா் யாரப் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் பயிற்சி உபகரணங்களை மாணவா்களின் பயன்பாட்டுக்கு அண்மையில் வழங்கினாா் (படம்). இந்த நிகழ்வில் பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com