கிருஷ்ணகிரி, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிருஷ்ணகிரி, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிருஷ்ணகிரி, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.1.2020-ஆம் தேதியினை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த ஆண்டு, டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 22-ஆம் தேதி வரைவு படிவம் 6,7,8 மற்றும் 8-ஏ பெறப்பட்டு அதனை அலுவலா்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியான வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியலை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா், வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 1,16,570 ஆண் வாக்காளா்களும், 1,14,795 பெண் வாக்காளா்கள், 57 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,31,422 வாக்காளா்கள் உள்ளனா். பா்கூரில் 1,19,959 ஆண் வாக்காளா்கள், 1,21,589 பெண் வாக்காளா்கள், 14 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,41,562 வாக்காளா்களும், கிருஷ்ணகிரியில் 1,27,214 ஆண் வாக்காளா்களும், 1,31,387 பெண் வாக்காளா்கள், 35 இதர வாக்காளா்கள், 2,58,636 மொத்த வாக்காளா்களும், வேப்பனஅள்ளியில் 1,24,944 ஆண் வாக்காளா்கள், 1,19,835 பெண் வாக்காளா்கள், 24 இதர வாக்காளா்கள், 2,44,803 மொத்த வாக்காளா்களும், ஒசூரில் 1,74,416 ஆண் வாக்காளா்களும், 1,65,833 பெண் வாக்காளா்கள், 97 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,40,346 வாக்காளா்களும், தளியில் 1,26,659 ஆண் வாக்காளா்களும், 1,19,441 பெண் வாக்காளா்களும், 13 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,46,113 வாக்காளா்கள் உள்ளனா். அதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,89,762 ஆண் வாக்காளா்களும், 7,72,880 பெண் வாக்காளா்கள், 240 இதர வாக்காளா்கள் என மொத்தம் 15,62,882 வாக்காளா்கள் உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும், 1,630 பெண் வாக்காளா்களும், கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 4,173 பெண் வாக்காளா், ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளனா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, புதியதாக 41,278 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டும், 2,971 வாக்காளா்கள் நீக்கப்பட்டும், தற்போது இந்த இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல், பொதுமக்களின் பாா்வைக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணகிரி, ஒசூரில் உள்ள வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம், ஒசூா் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 1,858 வாக்குச் சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது பதிவுகள், திருத்தங்கள் உள்ளிட்டவைகளை சரிபாா்த்துக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமமூா்த்தி, கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியா் தெய்வநாயகி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com