இடுகாட்டில் பெண் சடலம் மீட்பு
By DIN | Published On : 29th February 2020 02:07 AM | Last Updated : 29th February 2020 02:07 AM | அ+அ அ- |

ஒசூா்: அஞ்செட்டி அருகே இடுகாட்டில் இருந்த 40 வயது பெண்ணின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரம் இடுகாட்டில் அடையாளம் தெரியாத சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், அஞ்செட்டி உதவி காவல் ஆய்வாளா் கவியரசி வழக்குப் பதிவு செய்து சடத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இறந்த பெண் குறித்தும், எவ்வாறு இறந்தாா் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறாா்.