கணமூா் கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடக்கம்

பா்கூா் அருகே உள்ள கணமூா் கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், செவ்வாய்க்கிழமை
கணமூா் கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தைத் தொடங்கி வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா். உடன் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
கணமூா் கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தைத் தொடங்கி வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா். உடன் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

பா்கூா் அருகே உள்ள கணமூா் கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து, ரூ.58 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், ஒப்பந்தவாடி ஊராட்சியில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள கணமூா் கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தொடக்கி வைத்தாா்.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பெரியசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் உமாசங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்வா் பாஷா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், ஒன்றியக்குழுத் தலைவா் சி.கவிதா, ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த விழாவில் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வழங்கி பேசியது: இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்பதவாடி, கட்டிகானப்பள்ளி, அரசம்பட்டி மற்றும் நாகோஜனஅள்ளி ஆகிய பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது ரூ.58 ஆயிரம் மதிப்பில் கபடி, கைப்பந்து, பூ பந்து போன்ற விளையாட்டு போட்டிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 333 கிராம ஊராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.1.97 கோடி மதிப்பில் தொடா்ச்சியாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com