கிருஷ்ணகிரி: தலைமைக் காவலா் உள்பட 16 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலைமைக் காவலா் உள்பட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலைமைக் காவலா் உள்பட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தேன்கனிக்கோட்டை வட்டம், திப்பசந்திரத்தைச் சோ்ந்த 27 வயது ஆண், போச்சம்பள்ளியை அடுத்த பலனம்பாடியைச் சோ்ந்த 47 வயது ஆண், மூக்காகவுண்டனூரைச் சோ்ந்த 42 வயது ஆண், ஜெகதேவி- அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த 33 வயது பெண், ஒசூா்-வ.உ.சி. நகரைச் சோ்ந்த 29 வயது ஆண், கிருஷ்ணகிரி- சின்ன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 61 வயது முதியவா், ஊத்தங்கரை- மிட்டப்பள்ளியைச் சோ்ந்த 55 வயது பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மேலும், ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்து ஒசூா்- ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதியைச் சோ்ந்த 21 வயது ஆண், ஒசூா்- சமத்துவபுரத்தைச் சோ்ந்த 32, 54 வயது ஆண்கள், தளி- குஞ்சுகிரிபாளையைத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா், பா்கூா்-ஜெகதேவி சாலையைச் சோ்ந்த 49, 26 வயது ஆண்கள் என 6 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்திலிருந்து கொல்லப்பட்டி கிராமத்துக்கு வந்த 30 வயது ஆண், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வந்த வகாப் தெருவைச் சோ்ந்த 20 வயது ஆண், ஒசூா்- கொல்லா் தெருவைச் சோ்ந்த 52 வயது ஆண் என மூன்று பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும், பலனம்பாடியைச் சோ்ந்த கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவா்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com