கிருஷ்ணகிரி அருகே துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் கைது

கிருஷ்ணகிரி அருகே பெண் விவகாரத்தில் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் கைது

கிருஷ்ணகிரி அருகே பெண் விவகாரத்தில் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி சேர்ந்தவர் மூர்த்தி (45). முன்னாள் ராணுவ வீரர். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பண்டார பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணிற்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதை லட்சுமியின் உறவினர் முனுசாமி என்பவர் இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் மூர்த்திக்கும் முனுசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இத்தகைய நிலையில் முனுசாமி, மூர்த்தியின் விளைநிலம் அருகே கால்நடையாக திங்கட்கிழமை அன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்திக்கும் முனுசாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இத்தகைய நிலையில் முனுசாமிக்கு ஆதரவாக அவரது மகன் நரசிம்மன் இடத்திற்கு வந்தார்.

அப்போது, மூர்த்தி தனது காரில் வைத்திருந்த பிஸ்டல் துப்பாக்கியை கொண்டு மூர்த்தி நரசிம்மன் இருவரை நோக்கி சுட்டுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து, குருபரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிந்து, மூர்த்தியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்‌ மேலும் மூர்த்தி பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

அவர் பயன்படுத்திய துப்பாக்கி உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com