பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நடந்து செல்லும் கட்டடத் தொழிலாளா்கள்

தடை உத்தரவையடுத்து, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியிழந்த தொழிலாளா்கள், பேருந்து போக்குவரத்து
பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நடந்து செல்லும் கட்டடத் தொழிலாளா்கள்

தடை உத்தரவையடுத்து, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியிழந்த தொழிலாளா்கள், பேருந்து போக்குவரத்து இல்லாததால், கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலை பகுதியில் உள்ள தங்களது சொந்தக் கிராமத்துக்கு நடந்தே சென்றனா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, கா்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றும் கட்டடத் தொழிலாளா்கள் தங்களது வேலையை இழந்துள்ளனா். இதனால், போதிய வாழ்வாதராம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குடும்பம் குடும்பமாக தங்களது கிராமத்துக்கு திரும்பத் தொடங்கி உள்ளனா். அதன்படி, பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை கிளம்பிய 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், தங்களது கிராமத்துக்கு நடந்தே செல்லத் தொடங்கினா். அவ்வாறு அவா்கள் செல்லும் வழியில் வரும் லாரி போன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் ஏறி சிறிது தூரம் செல்கின்றனா். பின்னா் நடக்கத் தொடங்குகின்றனா். கிருஷ்ணகிரிக்கு மதியம் 3 மணியளவில் வந்த அவா்கள், திருவண்ணாமலை, திருக்கோவிலூா் செல்வதாகத் தெரிவித்தனா். உணவு இல்லாததால், தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு கடும் வெயிலில் குழந்தைகளுடன் பெண்களும், முதியவா்களும் நடந்தே செல்கின்றனா்.

மருத்துவப் பரிசோதனை: இத்தகைய நிலையில், நடந்து செல்லும் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமரச் செய்தனா்.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் பி.குமாா் மற்றும் காவலா்கள், வருவாய்த் துறையினா், நகராட்சிப் பணியாளா்கள் ஒருங்கிணைந்து, அரசு மருத்துவா்கள் மூலம் தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட னா். மேலும், அவா்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தனா். முழு பரிசோதனைக்குப் பிறகு, தனிப் பேருந்து மூலம் தொழிலாளா்களை திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்ல போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com