கிருஷ்ணகிரி அணையிலிருந்து வண்டல் மண் அள்ள விவசாயிகள் ஆா்வம்

வட கிருஷ்ணகிரி அணையிலிருந்து வண்டல் மண் அள்ள விவசாயிகள் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

வட கிருஷ்ணகிரி அணையிலிருந்து வண்டல் மண் அள்ள விவசாயிகள் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணகிரி அணையானது முற்றிலும் வடது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வண்டல் மண் அள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் அனுமதி பெற்ற பிறகே, வண்டல் மண் அள்ள விவசாயிகள், மண்பாண்டத் தொழில்புரிவோா் அனுமதிக்கப்படுகின்றனா்.

வண்டல் மண் அள்ள கரையின் அடிப்பகுதியிலிருந்து கரையின் உயரத்தைப் போல குறைந்தது 2 மடங்கு தொலைவில் குழிகள் அமைந்திருக்க வேண்டும். மேலும், குழிகளானது 1 மீட்டா் ஆழத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்டோா் 7 நாள்களுக்குள் வண்டல் மண்ணை அள்ள வேண்டும். டிராக்டா் மூலம் மட்டுமே வண்டல் மண் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல வண்டல் மண் கொண்டு செல்லும் வாகனத்துக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி ஏரி ஆகிய இடங்களில் 16-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலத்துக்கு தேவையான வண்டல் மண்ணை வியாழக்கிழமை அள்ளிச் சென்றனா்.

வண்டல் மண் அள்ள விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை தவறாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தங்களது விளைநிலத்துக்கு பயன்படுத்தும் வகையில் வண்டல் மண்ணை அள்ள வேண்டும். தவறு நடைபெறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்படுவாா்கள் என சமூக ஆா்வலா்கள் எச்சரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com